♠ தன்னுடைய வீட்டின் பீரோவில் இருந்து தனது தந்தைக்கு தெரியாமலேயே ரூ.2 லட்சம் பணம், 8 பவுன் நகையை மாணவி தன்னுடைய காதலனிடம் கொடுத்தார்.

♠ பீரோவில் வைத்திருந்த நகை, பணம் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்ட மாணவியின் தந்தை அவரிடம் விசாரணை நடத்தினார்.

திருப்பதி: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அக்காய பாலம், சங்கரமடம் பகுதியை சேர்ந்தவருக்கு ஒரு மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர்.

மகள் விசாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து வருகிறார். கல்லூரி அருகே உள்ள ஐ.டி.ஐ-யில் 17 வயது மாணவர் ஒருவர் படித்து வருகிறார்.

மாணவனும், மாணவியும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதால் அவர்களிடையே காதல் மலர்ந்தது.

இருவரும் சினிமா, பூங்கா என சுற்றி வந்தனர். இந்த நிலையில் மாணவர் காதலியிடம் ஐடிஐ படித்து முடித்தவுடன் வேலைக்குச் சென்று உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்.

தற்போது கடன் பிரச்சினை உள்ளதால் உன்னுடைய வீட்டில் இருந்து பணத்தை எடுத்து வந்து கொடு என கேட்டுள்ளார்.

இதையடுத்து தன்னுடைய வீட்டின் பீரோவில் இருந்து தனது தந்தைக்கு தெரியாமலேயே ரூ.2 லட்சம் பணம், 8 பவுன் நகையை தன்னுடைய காதலனிடம் கொடுத்தார்.

பீரோவில் வைத்திருந்த நகை, பணம் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்ட மாணவியின் தந்தை அவரிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் நகை, பணத்தை தன்னுடைய காதலனுக்கு கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து மாணவிக்கும், அவரது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தந்தையின் கழுத்து மார்பு பகுதியில் குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த மாணவியின் தந்தை ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து விசாகப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காதலனிடம் நகை, பணத்தை கொடுத்ததை போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் மாணவியின் காதலனை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் மாணவியிடம் வாங்கிய நகை, பணத்தை வேறு ஒரு காதலிக்கு செலவு செய்ததாக தெரியவந்தது.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி காதலன் மீது போலீசில் புகார் செய்தார். இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறார் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.

 

Share.
Leave A Reply