ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அங்கு அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கும் வகையில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
அத்துடன் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான தண்டனைகளையும் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில் காந்தஹாரில் உள்ள அகமது சாஹி காற்பந்து மைதானத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில்திருட்டில் ஈடுபட்ட நால்வரின் கைகளை தலிபான்கள் துண்டித்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதன்போது பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 9 குற்றவாளிகளுக்கு 39 கசையடிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முறையான விசாரணை ஏதுமின்றி மக்களுக்கு கொடூர தண்டனைகளை தலிபான்கள் வழங்கி வருவதாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.