ராஜஸ்தானில் சம்பவம்இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர், அரசாங்க வேலையை தக்க வைத்துக்கொள்வதற்காக, 6 மாத குழந்தையை கால்வாயில் எறிந்து கொலை செய்துள்ளார்.

இந்நபரையும் அவரின் மனைவியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

36 வயதான ஜவஹர்லால் மேக்வால், கீதா தேவி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பெண் குழந்தை இத்தம்பதியின் 3 ஆவது பிள்ளையாகும்.

ராஜஸ்தான் மாநில அரசாங்க கொள்கையின்படி, அரச ஊழியர்கள் 2 பிள்ளைகளை மாத்திரமே பெற முடியும். 3 ஆவது பிள்ளை பிறந்தபின் அரச பணியிலிருந்து கட்டாயமாக ஓய்வு பெற வேண்டும்.

இந்நிலையில், தனக்கு ஏற்கெனவே இரு பிள்ளைகள் உள்ள நிலையில், 3 ஆவது குழந்தை பிறந்ததால் அரசாங்கத் தொழிலை இழக்க நேரிடும் என ஜவஹர்லால் மேக்வால் அச்சமடைந்தாராம்.

இதனால், அவர் மேற்படி பெண் குழந்தையை கால்வாயில் வீசி கொலை செய்துள்ளார் என குறு;றம் சுமத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பில்கானேர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .

இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 மற்றும் 120பி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என பில்கானேர் அத்தியட்சகர் யோகேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply