15 வயது சிறுமியை  வர்த்தகர்கள் உட்பட பல்வேறு நபர்களுக்கு பணத்துக்காக விற்பனை செய்தார் எனக் கூறப்படும் சிறுமியின் தாயும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சிறுமியை பணத்துக்காக அழைத்துச் சென்ற வேறு நபர்களை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சிறுமியொருவர் வயோதிபர்களுக்கு விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடமிருந்து கிடைத்த அறிவுறுத்தலின்பேரில் பெண் உப பொலிஸ் பரிசோதகர் கமலா உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சிறுமியை வயதானவர்களுக்கு விற்பனை செய்து ஹோட்டல் அறைகளுக்கு அழைத்துச் சென்று அவருடன் உடலுறவு கொண்டமையும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Share.
Leave A Reply