டயர் நிக்கொலஸ் என்ற கறுப்பினத்தவர் கொலை செய்யப்பட்ட விதம் குறித்து வீடியோ வெளியாகவுள்ள நிலையில் சம்பவம் இடம்பெற்ற டென்னசி பகுதி மக்கள் பொறுமைகாக்கவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போக்குவரத்து பொலிஸாரினால் தடுத்துநிறுத்தப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் டயர் நிக்கொலஸ் உயிரிழந்தமை தொடர்பில் ஐந்து கறுப்பினபொலிஸ் உத்தியோகத்தர்களிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

பொடிகாமில் பதிவான வீடியோக்கள் இன்று வெளியாகவுள்ளன.

அவர் தாக்கப்படுவதை அது காண்பிக்கும் என கொல்லப்பட்டவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வீடியோவை பார்வையிட்ட பின்னர் நான் கடும் மனஉளைச்சலை  எதிர்கொண்டுள்ளேன் என வீடியோவை ஆராய்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.அதிகாரிகளின் நடவடிக்கை முற்றிலும் பயங்கரமானது என அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற மெம்பிஸ் நகரத்தில்பதற்றம் நிலவுகின்றத பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளனர்.

உள்ளுர் பூங்காவில் சூரியஅஸ்தமனத்தை படம் எடுத்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த நிக்கொலசை கறுப்பினத்தை சேர்ந்த ஐந்து பொலிஸார் தடுத்துநிறுத்தினர் என கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தை கண்மூடித்தனமாக செலுத்திய குற்றச்சாட்டிலேயே பொலிஸார் அவரை தடுத்துநிறுத்தியுள்ளனர்.

அவரை தடுத்து நிறுத்தி உதைத்துள்ளனர் என கொல்லப்பட்டவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

ஐந்து பொலிஸாருக்கும் எதிராக கொலை குற்ச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்த வீடியோவை அதிகாரிகள் வெளியிடவுள்ள நிலையில் ஜனாதிபதி பைடன் அமைதிகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கான வேண்டுகோளில் நானும் கொல்லப்பட்டவரின்  குடும்பத்தவருடன்இணைந்து கொள்கின்றேன் சீற்றத்தை புரிந்துகொள்ள முடிகின்றது ஆனால் வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply