கேரளாவில் முன்னாள் காதலர் பற்றி கூறிய 3-வது மனைவியை படுகொலை செய்து, அவரது உடலுடன் உடலுறவு கொண்ட கணவர் கைது செய்யப்பட்டார்.
கொச்சி, கேரளாவில் இளமையாக இருப்பதற்காக 2 பெண்களை தம்பதி ஒன்று நரபலி கொடுத்து, நரமாமிசம் உண்ட கொடூர தகவல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த சம்பவம் வெளியுலகிற்கு தெரிய வந்தது. இந்த சம்பவத்தில், பாரம்பரிய மசாஜ் சிகிச்சை நிபுணரான பகவல் சிங் என்ற பகவந்த் (55), அவரது மனைவி லைலா (52) மற்றும் அவர்களை தகாத செயலுக்கு தூண்டிய பாலியல் சைக்கோ என போலீசாரால் கூறப்படும் ரஷீத் என்ற முகமது ஷபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், மற்றொரு அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது. கேரளாவின் காலடி பகுதியில் வசித்து வருபவர் மகேஷ். இவரது மனைவி ரத்னவள்ளி (வயது 35). தமிழக பகுதியை சேர்ந்தவரான ரத்னவள்ளி, மகேசுக்கு 3-வது மனைவியாவார்.
இந்நிலையில், தனது மனைவியை காணவில்லை என கூறி போலீசில் மகேஷ் புகார் அளித்து உள்ளார்.
ஆனால், விசாரணையில் பல சந்தேகங்கள் எழவே, மகேஷிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளன.
அவர், மனைவி ரத்னவள்ளியை கொலை செய்த விவரங்களை போலீசில் ஒப்பு கொண்டுள்ளார்.
அவரது உடலை வீட்டுக்கு அருகே புதைத்து வைத்து உள்ளார். தொடர் விசாரணையில், ரத்னவள்ளி மகேஷிடம் இந்த உறவை முடித்து கொள்வோம். இருவரும் பிரிந்து விடுவோம். இனி தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்.
இதற்கு பின்னணியில் ரத்னவள்ளியின் காதலரான முத்து என்பவர் இருந்துள்ளார். சேலத்தில் வசிப்பவரான முத்துவுடன் ஒன்றாக வாழ்வது என ரத்னவள்ளி முடிவு செய்துள்ளார்.
இதனை அறிந்த மகேஷ், ஆத்திரத்தில் அவரது கழுத்து பகுதியை நெறித்து, கொலை செய்து உள்ளார்.
ஆனால், அதன்பின்பும் ஆத்திரம் தீராமல் அவரது உடலுடன் உடலுறவிலும் ஈடுபட்டு உள்ளார்.
பின்னர் நிர்வாண நிலையிலேயே உடலை புதைத்து உள்ளார். போலீசாரின் விசாரணையில் குற்ற சம்பவங்களை அவர் கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.