தனது வீட்டில் மகளின் கட்டிலுக்கு அடியில் மறைந்திருந்த 15 வயதான சிறுமியின் காதலன் என்று சந்தேகிக்கப்படும் இளைஞனை, அச்சிறுமியின் பெற்றோர் கையும் களவுமாக பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தில் அவ்விளைஞன் தன்னுடைய காதலியுடன் உல்லாசமாக இருந்துள்ளார் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அனுராதபுரம் கல்கிரியாகம பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.

15 வயது சிறுமி தனது தாயின் அலைபேசியில் இளைஞருடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். மகளின் நடவடிக்கையில் மாற்றத்தை கண்ட அம்மா, காதல் உறவை நிறுத்துமாறு எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபர் சிறுமியின் வீட்டுக்குள் இரகசியமாக சனிக்கிழமை (28) நுழைந்து மின்சாரம் துண்டிக்கப்படும் வரை சிறுமியின் கட்டிலுக்கு அடியில் பல மணிநேரம் தங்கியிருந்துள்ளார்.

இரவு 9 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவர் தனது காதலியுடன் படுக்கையில் இருந்தார்.

அதன் பின்னர் மீண்டும் 10 மணியளவில் மின்சாரம் வந்ததையடுத்து மீண்டும் படுக்கைக்கு அடியில் சென்றதாக பொலிஸாரிடம் காதலன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் தந்தை அதிகாலை 3 மணியளவில் எழுந்து, தண்ணீர் குடிக்க வந்துள்ளார். அப்போது சிறுமியின் படுக்கையறையில் சத்தம் கேட்டுள்ளது.

கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றபோது, காதலன் இருந்துள்ளார். அதனையடுத்து, அவ்விளைஞனை பிடித்த சிறுமியின் தந்தை, இதுதொடர்பில் அவ்விளைஞனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதேவேளை, பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.

அவ்விரு தரப்பினரும் வீட்டுக்கு வந்ததை அடுத்து, அவ்விளைஞனை அந்த சிறுமியின் தந்தை ஒப்படைத்துள்ளார்.

Share.
Leave A Reply