நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா திடீரென கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் தாடி பாலாஜி என்பதும் அவரது மனைவி நித்யா என்பது தெரிந்ததே. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாதவரம் சாஸ்திரி நகர் என்ற பகுதியில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா தனது மகளுடன் வசித்துவரும் நிலையில் அவருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கும் இவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் திடீரென நித்யா நேற்று இரவு எதிர் வீட்டு உரிமையாளரின் காரை கல்லால் அடித்து சேதப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நித்யா மீது பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.
பிறருடைய சொத்துக்கு சேதம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.