மதுரை திருப்பாலை அய்யப்பன் நகர் தாமரை வீதியைச் சேர்ந்த 25 வயதான பெண்ணொருவர் தல்லாகுளம் மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

“எனக்கு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அப்போது, 50 பவுன் நகை, ரூ.5 இலட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்களை பெற்றோர் எனக்கு கொடுத்தனர்.

மேலும் ரூ. 10 இலட்சம் செலவில் திருமணம் செய்து வைத்தனர். மதுரை பாலமேடு அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் அவர் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், திருமண நாள் அன்று அவருக்கு ஆண்மை குறைபாடு உள்ளது என்பது தெரியவந்தது. நான் அதிர்ச்சியடைந்தாலும், வேறு வழியின்றி அவருடன் குடித்தனம் நடத்தி வந்தேன்.

இந்த நிலையில், தனது கணவனின் அண்ணன், இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, எனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.

இதற்கு அவரது மனைவியும், அவரது அம்மாவும் உறவினரும் உடந்தையாக உள்ளனர். எனவே, நான் இது தொடர்பாக என் கணவரிடம் புகார் செய்தேன்.

அப்போது அவர், “என் சகோதரரை கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்” என்று சொன்னார். இதனிடையே, என் மாமியார் குடும்பத்தினர் வரதட்சணையாக மேலும் ரூ.10 இலட்சம் வாங்கி வரும்படி என்னை மிரட்டினார்கள். இதற்கு நான் மறுத்தேன். எனவே அவர்கள் என்னை பட்டினி போட்டு கொல்ல பார்க்கிறார்கள். எனவே பொலிஸார் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply