இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நீடிக்கின்ற போதிலும் திறைசேரி ஜனாதிபதி பிரதமர் அலுவலகங்களிற்கும் அமைச்சுகளிற்கும் பெருமளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது..

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இலங்கை இன்னமும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் சிக்குண்டுள்ளது – சில மாதங்களிற்கு முன்னரே தனது வரலாற்றில் முதல் தடவையாக வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது- தனது கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

அதிகரிக்கும் வரிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வாழ்க்கை தரத்தில் விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ளவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ள அதிகரித்த வாழ்க்கை செலவீனம் போன்றவை காணப்படுகின்றன.

சமீபத்தில் அதிகரிக்கப்பட்ட வரிகள் திறைசேரிக்கு சிறிய நிம்மதியை கொடுத்துள்ளன.

எனினும் ஜனாதிபதி பிரதமர் அலுவலகங்களிற்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி பல பில்லியன்களாக காணப்படுகின்றது இவற்றில் குறைப்புகள் இடம்பெறவில்லை.

திறைசேரி வெளியிட்டுள்ள புள்ளவிபரங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது ஜனாதிபதி பிரதமர் அலுவலகங்களிற்கும் அமைச்சுகளிற்கும் 2023 இல் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி 2022 இல் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை போன்றே காணப்படுகின்றது – அதே அளவிலானதாக காணப்படுகின்றது.

இதன் காரணமாக பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில் ஏன் பாரிய குறைப்புகள் இடம்பெறவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜனாதிபதிக்கு 3.88 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது – 2022 இல் இந்த ஒதுக்கீடு 3.04 பில்லியனாக காணப்பட்டது.

ஜனாதிபதிக்கு விசேட கொடுப்பனவுகளிற்காக 70 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது கடந்த வருடம் இதே தொகை ஒதுக்கப்பட்டது.

2023 இல் ஜனாதிபதியின் உள்நாட்டு வெளிநாட்டு பயணங்களிற்காக 86 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, 2022 இல் இந்த தொகை 26 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 

Share.
Leave A Reply