யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் சங்கத்தான் ஏ9 வீதியில் இன்று (29) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் கொடிகாமம் வதனி ஜுவல்லரியின் உரிமையாளர் சண்முகலிங்கம் பிரதாப் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த வர்த்தகர் சமிக்கை செய்தவாறு வீதியின் மறுபக்கம் செல்ல முற்பட்ட போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக யாழ்.செய்தி தெரிவிக்கிறது.
இந்த விபத்தில் நகைக்கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அண்மையில் திருமணம் செய்து கொண்ட இளைஞரின் மனைவிக்கு குழந்தை பிறக்கவிருந்த போதே இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவரது சடலம் தற்போது யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இளைஞன் சிறு காயங்களுடன் யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோக சம்பவம் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.