இலங்கை 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐநாஅமர்வில் இந்தியாஇந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
இந்தியவம்சாவளி தமிழர் உட்பட அனைத்து மக்களினதும் மனித உரிமைகளையும் உறுதி செய்யுமாறும் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக ஜெனிவாவில் இன்று இடம்பெற்றுவரும் 42வது அமர்வில் உலகளாவிய காலமுறை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளது
2006 ஆம் ஆண்டு ஐ.நா.சபையின் பொதுச் சபையால் நிறுவப்பட்ட உலகளாவிய காலமுறை தொடர்பான மதிப்பாய்வு குழுவினால் ஒவ்வொரு உறுப்பு நாடும் நான்கரை ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.
2008 ல் முதல் தடவையாகவும் 2012 ல் இரண்டாவது தடவையாகவும் 2017 ல் மூன்றாவது தடவையாகவும் இலங்கை உட்பட அனைத்து உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட்டன.
இந்நிலையில் நான்காவது சுழற்சியின் கீழ் 2022 டிசம்பர் 22 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மற்றும் 2017 நவம்பரில் உலகளாவிய காலமுறை தொடர்பான குழுவால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று ஆராயப்படவுள்ளது.
அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள்இ இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் விரிவான ஆலோசனைகளின் பின்னர் வெளிவிவகார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய அறிக்கை தயாரிக்கும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் இதே காலகட்டத்தில் 75வது சுதந்திரக் கொண்டாட்டங்கள் நடைபெறுவதால் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மீளாய்வுக்கான அறிக்கையை முன்னரே பதிவுசெய்யப்பட்ட வீடியோ அறிக்கை மூலம் சமர்பிக்கவுள்ளார்.
இதில் மனித உரிமை மேம்படுத்த அரசாங்கம் சுயமாக முன்வந்து ஏற்றுக்கொண்ட விடயங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவையினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அமுல்படுத்திய விதம் குறித்தும் அவர் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தவுள்ளார்