அமெரிக்க ஊடக நிறுவனமான ஃபோர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள `2023 ரியல் டைம் பில்லியனர்கள்’ பட்டியலில், 82.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புகளோடு உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்துள்ளார் அம்பானி.

அதானிக்கு ஹிண்டன்பர்க்கின் ஆய்வறிக்கை ஒரு அடியாக வீழ்ந்தது என்றே கூற வேண்டும்.

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இருந்து மெள்ள மெள்ள சரிந்து வருகிறார். அதானி குழுமத்தைச் சுற்றி குழப்பங்கள், நம்பிக்கையின்மை, நிச்சயமில்லாத நிலையால் மளமளவென பங்குகள் சரிந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

 

இந்த இடத்தில்தான் உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்ட முகேஷ் அம்பானி, அதானியை முந்தியிருக்கிறார்.

அமெரிக்க ஊடக நிறுவனமான ஃபோர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள `2023 ரியல் டைம் பில்லியனர்கள்’ பட்டியலில், 82.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புகளோடு உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 10-வது இடத்தை பிடித்துள்ளார் அம்பானி. இவரின் சொத்து மதிப்பு 0.19 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் 119 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த அதானியின் சொத்து மதிப்பு, 84.4 பில்லியன் அமெரிக்க டாலராகி பட்டியலில் 11வது இடத்தைப் பிடித்தது.

அப்போது, அம்பானியின் சொத்து மதிப்பு 82.2 பில்லியன் டாலர்களாக இருந்தது. பட்டியலில் 12-வது இடத்தில் இருந்தார். அதாவது முகேஷ் அம்பானியைவிட அதானி வெறும் 2.2 பில்லியன் டாலர்களே முன்னிலையில் இருந்தார்.

இப்போது, அதானியின் சொத்து மதிப்பு 67.4 பில்லியன் அமெரிக்க டாலர்களான நிலையில், 16வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Share.
Leave A Reply