கனடாவைச் சேர்ந்த 18 வயது யுவதியொருவர், லொத்தர் சீட்டிழுப்பில் 48 மில்லியன் கனேடிய டொலர் (சுமார் 1,318 கோடி இலங்கை ரூபா) ஜக்பொட் பரிசை வென்றுள்ளார்.
ஜூலியட் லெமோர் எனும் இந்த யுவதி, ‘கோல்ட் போல்’ லொத்தர் சீட்டிழுப்பில் இப்பரிசை வென்றுள்ளார்.
தான் லொத்தர் டிக்கெட் வாங்கியமை இதுவே முதல் தடவை என ஜூலிட் கூறியுள்ளார்.
கனடாவில் இத்தகைய பெருந்தொகை ஜக்பொட் பரிசை வென்ற மிக இளமையானவர் ஜூலியட் தான் என ஒன்டாரியோ லொட்டரி அன்ட் கேமிங் கோர்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், தனது கல்வியை பூர்த்தி செய்து மருத்துவராகுவதற்கு தான் திட்டமிட்டுள்ளதாக ஜூலியட் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.