பிரேசில் நாட்டில் விமானம் ஒன்று தாமதமாக கிளம்பிய நிலையில், அதன் பின்னால் உள்ள காரணம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

பிரேசிலின் சல்வேடர் நகரில் இருந்து சா பவுலோ நகரத்திற்கு விமானம் ஒன்று புறப்பட இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழலில், இந்த விமானம் கிளம்புவதற்கு ஒரு சில நிமிடங்களே இருந்ததாக சொல்லப்படுகிறது.

அப்படி இருக்கையில் தான், யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் அங்கே அரங்கேறி உள்ளது. அந்த விமானத்தில் ஏறிய சுமார் 15 பெண் பயணிகளுக்கு இடையே திடீரென வாக்குவாதம் தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

அவர்கள் அனைவரும் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சூழலில், வாக்குவாதமாக ஆரம்பித்து பின்னர் மாறி மாறி மோதிக் கொள்ளும் அளவிற்கும் சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

இந்த சண்டை பெரிய அளவில் அங்கிருந்த பயணிகளையும் அவதிக்கு உள்ளாக்கியதாக தெரிகிறது.

அது மட்டுமில்லாமல், அங்கே விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் வந்து அந்த பெண்களின் சண்டையை பிரித்து விடவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பான வீடியோக்கள் பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி பலரையும் பதற்றம் அடைய வைத்திருந்தது.

அதே போல, இந்த விமானமும் சில மணி நேரம் தாமதமாக பறந்துள்ளது. மேலும் அந்த பெண்கள் சண்டை போட்டதற்கான காரணம் குறித்து வெளியான தகவலின் படி, ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவரிடம் தனது குழந்தைக்காக ஜன்னலோர இருக்கையை விட்டுத் தருமாறு மற்றொரு பெண் கேட்டுள்ளார்.

ஆனால், இதற்கு ஜன்னலோரத்தில் இருந்த பெண் பயணி மறுக்கவே இதன் பெயரில் வாக்குவாதம் தொடங்கி பின்னர் இரு குடும்பங்களுக்கு இடையே சண்டையாக மாறி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் சண்டையில் ஈடுபட்ட அனைத்து பயணிகளையும் விமானத்தில் இருந்து இறக்கி விட்டு சுமார் 2 மணி நேரம் கழித்து விமானம் கிளம்பி உள்ளது.

ஜன்னல் இருக்கையின் பெயரில், விமானத்தில் சண்டை நடந்தது தொடர்பான விஷயம், தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது.

Share.
Leave A Reply