யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள அரச வங்கியொன்றில் 1 மில்லியன் ரூபா கடனாகப் பெறுவதற்கு போல் ஆவணங்களைத் தயாரித்த வழக்கில் நெல்லியடி பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் வட மாகாணத் தைச் சேர்ந்தவர்.

கடன் ஆவணங்களை போலியாகத் தயாரித்து பணம் பெற்ற பிரதான சந்தேக நபர் வெளிநாடு தப்பிச் சென்று விட்டார்.

வங்கி அதிகாரிகள் அளித்த முறைப்பாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்தனர். பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சந்தேக நபர் 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 1 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சந்தேக நபர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply