கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை மட்டும் கிட்டத்தட்ட 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.

துருக்கி, சிரியாவில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அன்றைய தினமே அடுத்தடுத்து, இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு, கடுமையான உயிர்சேதங்களை ஏற்படுத்தின. வானுயர்ந்த கட்டிடங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் என அனைத்தும் இடிந்துவிழுந்து நொறுங்கின.

கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை மட்டுமே கிட்டத்தட்ட 21,000இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.

மீட்புப்பணிகள் நடந்துவரும் நிலையில், மேலும் இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக துருக்கி ஜனாதிபதி எர்டோகன், துருக்கியின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள 10 மாகாணங்களில் மூன்று மாத காலத்துக்கு அவசர நிலையை அறிவித்திருக்கிறார்.

இயற்கை ஒருபக்கம் தொல்லை தந்தாலும், மறுபக்கம் உலக நாடுகள் பலவும் துருக்கி, சிரியாவுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைத்து கைகொடுத்துவருகின்றன.

அந்த வரிசையில், துருக்கியில் 30 கிலோமீற்றர் தூரத்துக்கு பாதையில், நிவாரணப் பொருள்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களின் காட்சி, மனிதாபிமானம் மீதான துருக்கிவாசிகளின் நம்பிக்கையை இன்னும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.

இந்த நிலையில் நிலநடுக்கத்துக்கு முன், நிலநடுக்கத்துக்குப் பின் என, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி பகுதிகளின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.

அந்தப் புகைப்படங்களில் ஒருபக்கம் துருக்கியின் சில பகுதிகள் உயர்ந்த கட்டிடங்களுடனும், மறுபக்கம் சரிந்து விழுந்து தரைமட்டமாகவும் காணப்படுகின்றன.

Share.
Leave A Reply