சூர்யா ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

நடிகர் சூர்யா தனது 42 ஆவது படத்திற்காக ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. ஓவ்வொரு படத்திலும் வித்தியாசமாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் சூர்யா, தற்போது தனது 42 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சிறுத்தை, வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்குகிறார்.

 

சூர்யாவுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படத்தை, ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கிறது. 3டி-யில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சூர்யா 13 கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், 10 மொழிகளில் தயாராகும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரலாற்று சம்பந்தப்பட்ட காட்சிகளுக்காக சூர்யா தனது உடம்பை இரும்பாக்கி வருகிறார்.

இதுதொடர்பாக, சூர்யா ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

1000 வருடங்களுக்கு முன்பான சரித்திர கதைக்கேற்ப உடம்பை ஃபிட்டாக வைக்க சூர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் படத்திற்காக சூர்யாவின் மெனக்கெடல்களை பார்த்து ஆச்சரியத்துடன் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

சூர்யா இதற்கு முன்பாக கஜினி, வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் குறிப்பிட்ட சில காட்சிகளுக்காக கடுமையான உடற்பயிற்சி செய்து சிக்ஸ்பேக் வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply