கடந்த 6 நாட்களுக்கு முன் சாந்தியின் கணவர் மோகனசுந்தரமும், அவரை தொடர்ந்து தாயார் கனகாம்பாளும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
சாந்தி வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசவே அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஈரோடு: உணவுக்கு கூட வழியில்லாத நிலையில் இறந்து போன கணவன் மற்றும் தாயார் சடலங்களை ஒரு வாரம் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த சம்பவம், ஈரோடு அருகே நிகழ்ந்திருக்கிறது.
கோபிசெட்டிபாளையம் வண்டிப்பேட்டை குமணன் வீதியை சேர்ந்த சாந்தி-மோகனசுந்தரம் தம்பதிக்கு, மன வளர்ச்சி குன்றிய சரவணக்குமார் என்ற மகனும், சசிரேகா என்ற மகளும் உள்ளனர்.
சசிரேகா இருந்த வரை கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அவர் திருமணமாகி சென்ற பிறகு சாந்தி, தனது வயதான தாயார், கணவர் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மகனுடன் வசித்து வந்தார்.
பல நாட்கள் பட்டினியாகவும், அக்கம் பக்கம் இருப்பவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டும் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 6 நாட்களுக்கு முன் சாந்தியின் கணவர் மோகனசுந்தரமும், அவரை தொடர்ந்து தாயார் கனகாம்பாளும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய கூட பணமில்லாத நிலையில், இரு சடலங்களை வீட்டிற்குள்ளேயே வைத்து விட்டு இருந்துள்ளார்.
சாந்தி வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசவே அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார், இருசடலங்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து பின்னர் அடக்கம் செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.