சிவனொளிபாத மலை வழிபாட்டுக்காக வந்த ஒரு பெண்ணொருவருக்கு ஆலயத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

யாத்திரைக்கு வந்த இந்த பெண் நேற்றிரவு (11) குழந்தையை பிரசவித்ததாகவும், புதிதாக பிறந்த குழந்தையும் தாயும் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரு தினங்களாக சிறிபாத யாத்திரைக்கு நாடளாவிய ரீதியில் பெருமளவான யாத்திரிகர்கள் வருகை தந்திருந்த நிலையில், இரத்தினபுரி – மாரப்பன பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணித் தாயார் ஒருவர் நேற்றுமாலை நீண்ட நேரம் நின்று வழிபாடு செய்து கொண்டிருந்தார்.

இத் தாய்க்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டு இரவு 7.30 மணியளவில் குழந்தையும் பிறந்துள்ளது
அங்கிருந்த வந்த பெண் பக்தர்களும் மேற்படி தாய்க்கு உதவி புரிந்துள்ளனர்.

பொலிசாரின் உதவியுடன் உடனடியாக தாயும் சேயும் நல்லதண்ணி பகுதிக்கு கொண்டுவரப்பட்டு சுவசெய அம்புலன்ஸ் வண்டிமூலம் டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பிரசவித்த தாய் மற்றும் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக டிக்கோயா ஆதார வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply