மூதூர் – புளியடிச்சோலை கிராமத்தில் நேற்று ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபர் அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி கோகிலராசா (வயது 48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இரு நபருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பை ஏற்படுத்தியதாகவும் இதனால் படுகாயத்துக்கு உள்ளான குறித்த நபர் சிகிச்சைக்காக கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மரணித்துள்ளதாக தெரியவருகிறது.

மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Share.
Leave A Reply