வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (12.02.2023) இரவு 9 மணியளவில் உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் சிவநகர் பகுதியைச் சேர்ந்த யசோதரன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் விசாரணை

மரணவீடு ஒன்றில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு இந்த சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளது.

15 க்கு மேற்பட்டவர்களைக் கொண்ட குழு வாளினால் சரமாரியாக வெட்டியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும், தாக்குதல் மேற்கொண்ட குறித்த குழுவை சேர்ந்த ஒருவருமாக நால்வரும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் உயிரிழந்துடன், மேலும் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply