இந்தியா – தமிழகத்தில் பக்தர் ஒருவர் தந்து பாதணிகளை பாதுகாப்பாக வைத்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
கோவில் திருவிழா ஒன்றுக்காக சென்ற பக்தர் ஒருவர் தனது துவிச்சக்கரவண்டியின் முன் சக்கரத்துடன் தனது பாதணியினை சங்கிலியினால் இணைத்து பூட்டி வைத்துவிட்டு திருவிழாவில் கலந்துகொண்டுள்ளார்.
பாதணிகளை பாதுக்காப்பாக வைப்பதற்கு சிறிய வகை கூடாரங்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த போதிலும் இவரின் வித்தியாசமான இந்த செயல் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.