கடலூர்: புது மனைவியை காணோமாம்.. காணோமாம்.. கடலூர் போலீசார் வலையைவீசி தேடி வருகிறார்கள்.. அவருக்கு என்ன நடந்தது? என்பது ஒருபக்கம் இருந்தால், அந்த 9 பேர் யார் யார்? என்ற விசாரணையைதான் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வானியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ்.. 25 வயதாகிறது.. கரும்பு வெட்டும் கூலிதொழிலாளி இவர்.

வேலை நேரம் போக, ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வந்தார் அருள்ராஜ்.. நண்பர்கள் ஏராளமானவர்களுடனும் ஃபேஸ்புக்கில் தொடர்பில் இருந்து வந்தார். அப்போது அருள்ராஜிக்கு மகாலாட்சுமி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.

சங்கீதா

இந்த பெண் வேலூரை சேர்ந்தவராம்.. தான் ஒரு ஆதரவற்றவர் என்று சோகத்தை பிழிந்து கசக்கியுள்ளார்.. இதைக்கேட்டு அருள்ராஜ் உருகி உள்ளார்..

இருவருக்கும் காதல் ஆரம்பமானது.. இதையடுத்து, அருள்ராஜ் அந்த பெண்ணை கடந்த ஆண்டு பண்ருட்டியில், ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

அருள்ராஜ் கரும்பு வெட்டும் தொழிலுக்காக வெளியூர்களுக்கு செல்வாராம்.. அதனால், வெளியூர்களிலேயே நிறைய நாள் தங்கியிருப்பது வழக்கமாம்.. அருள்ராஜ் ஊரில் இல்லாத நேரங்களில், தன்னுடைய சொந்தக்காரர்களை பார்க்க செல்வதாக சொல்லி மகாலட்சுமி கிளம்பி போவாராம்.

டுபாக்கூர் அட்ரஸ்

இப்படியே நிறைய நாள் சென்றுள்ளார்.. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அருள்ராஜ், தன்னுடைய தங்கை திருமணத்துக்காக 7 பவுன் நகை, 1 லட்சம் ரூபாய் பணத்தை வீட்டில் வைத்திருந்தார்..

இந்த நகை, பணத்துடன் மகாலட்சுமி திடீரென மாயமானார். நீண்ட நாட்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை..

இதனால், அதிர்ச்சியடைந்த அருள்ராஜ் அவரை பல இடங்களில் தேடினார். ஃபேஸ்புக்கில் காதலிக்கும்போது, அந்த பெண் கொடுத்த அட்ரஸ் மட்டும்தான் கையில் இருந்தது..

அதனால், அதைவைத்து கொண்டு விசாரித்தார்.. ஆனால், அது போலியான அட்ரஸ் என தெரியவந்தது.. செல்போன் நம்பரும் தந்திருந்ததால், அந்த நம்பருக்கு போன் செய்தால், அந்த நம்பரும் வேறு ஒருவருடையதாம்..

16வது மாப்ளை

மொத்தமாக ஏமாந்து போன அருள்ராஜ், இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிந்து விசாரணையையும் துவங்கினர்.. அப்போதுதான், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

அருள்ராஜை திருமணம் செய்த மகாலட்சுமி ஏற்கனவே கல்யாணமானவராம்.. அதுவும் 8 பேரை இதற்கு முன்பு கல்யாணம் செய்தவராம்.. 9வதாக வாக்கப்பட்டவர்தான் அருள்ராஜ்.. வேலூர், கோவை, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8 இளைஞர்களை, 8 ஊர்களில் திருமணம் செய்துள்ளார்.

. இப்போது அந்த பெண்ணை காணோம்.. எல்லாருமே சேர்ந்து சங்கீதாவைதான் தேடி கொண்டிருக்கிறார்கள்..!!!

அனாதை அனாதை

பண்ருட்டி மகளிர் போலீசில் அருள்ராஜ் தந்த புகார் மனு இதுதான்: ‘கடந்த ஆண்டு செல்போனில் முகநூல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அப்போது, 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் எனது முகநூல் கணக்கில் இணைந்தார். அப்போது அவர், வேலூர் மாவட்டம் விருதம்பட்டு ஒட்டைபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மகாலட்சுமி என்று அறிமுகம் செய்தார்.

மேலும் அவர், தான் ஒரு அனாதை என்றும், உறவினர்கள் யாரும் கிடையாது என்றும் கூறினார்.

அதன்பிறகு ஒரு நாள் திடீரென அவர், என்னை பிடித்துள்ளதாகவும், நண்பராக பேச வேண்டும் என்றார். பின்னர் இருவரும் முகநூலில் நண்பர்களாக பேசி வந்தோம்.

வள்ளி அட்ரஸ்
இதனை தொடர்ந்து 10 நாட்களுக்கு பிறகு இருவரும் செல்போன் எண்ணை பரிமாறி பேசினாம்.
அப்போது அவர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.
உடனே நானும், எனது பெற்றோரிடம் கூறி திருமணம் செய்ய சம்மதம் வாங்கினேன். அதன்படி எனக்கும், மகாலட்சுமிக்கும் கடந்த 23.1.2022 அன்று திருவதிகையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது.
அதன்பிறகு 4 மாதம் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். இந்த நிலையில் திடீரென ஒரு நாள், மகாலட்சுமி தனது பள்ளி தோழிக்கு உடல் நிலை சரியில்லை எனவும், சென்னைக்கு சென்று பார்த்து வருவதாகவும் கூறினார்.
அதற்கு நானும் சம்மதம் தெரிவித்தேன். உடனே அவர், எனது வீட்டில் இருந்த 6½ பவுன் நகை, ரூ.83 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்றவர், மீண்டும் வரவில்லை
வள்ளி விசாரணை

உடனே நான், அவரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது சரியாக பதில் கூறாமல் இணைப்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து அவர் கொடுத்த முகவரியில் விசாரித்தபோது, அது தவறான முகவரி என்பதும், அவர் என்னை போன்று பலரை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதும் தெரியவந்தது.

அந்த வகையில் என்னை அவர், 9-வதாக திருமணம் செய்துவிட்டு நகை, பணத்துடன் ஓடிவிட்டார்.

என்னை ஏமாற்றிய மகாலட்சுமி மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

புகாரை பெற்ற இன்ஸ்பெக்டர் வள்ளி விசாரணை நடத்தி வருவதோடு, மகாலட்சுமியை தேடி வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Share.
Leave A Reply