கணவரை மதுவில் விஷம் கலந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்
செங்கல்பட்டு: மது அருந்திய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்..
அவரிடம் மதுராந்தகம் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்..
என்ன நடந்தது?
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ளது நடராஜபுரம்.. இங்கு வசித்து வருபவர் சுகுமார்.. 27 வயதாகிறது..
இவரது மனைவி பெயர் கவிதா… 25 வயதாகிறது.. செங்கல்பட்டில் கோழிக்கடை ஒன்றில் சுகுமார் வேலை பார்த்து வருகிறார்.
கவிதா, ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்… இந்த கம்பெனிக்கு போனதில் இருந்துதான் கவிதாவின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டுள்ளது..
பத்திக்கிச்சே
தன்னுடன் வேலைபார்க்கும் ஒருவருடன் கவிதாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.. இந்த நட்பு தகாத உறவாக மாறிவிட்டது..
ஒருகட்டத்தில், சுகுமாருக்கு இந்த கள்ளக்காதல் விவகாரமும் தெரியவந்துள்ளது.. இதனால், கவிதாவை பலமுறை கண்டித்துள்ளார்…
இது தொடர்பாக தம்பதிக்குள் தகராறும் வெடித்துள்ளது.. ஒவ்வொரு முறையும் சுகுமார் கண்டிக்கும்போதெல்லாம், அதை எதிர்த்து சண்டை போட்டே வந்துள்ளார் கவிதா.. ஆனால், கள்ளக்காதலை கைவிட தயாராக இல்லை என்பதையும் திடமாக சுகுமாரிடம் சொல்லிவிட்டாராம்.. நாளடைவில் இருவருக்கும் சண்டை அதிகமாகி, சில நாட்கள் பிரிந்தும் இருந்துள்ளனர்.
2 மதுபாட்டில்கள்
கணவரை விட்டு, தனியாக வந்தநிலையில், கள்ளக்காதல் இன்னும் அதிகமாகவே தொடர்ந்துள்ளது..
அதேசமயம், ஏதாவது ஒரு ரூபத்தில் கணவன் மீண்டும் வந்து தொந்தரவு தந்துவிடுவாரோ, கள்ளக்காதலை பிரித்துவிடுவாரோ என்று கவிதா பயந்தார்..
பேசாமல் சுகுமாரை கொன்றுவிட்டால், இனி எந்த பிரச்சனையும் தனக்கு வராது என்றும் நம்பினார்.. இதற்காக கொலை செய்யவும் பிளான் செய்தார்..
சுகுமாரின் அண்ணனான மணி என்பவரிடம் 400 ரூபாய் பணம் கொடுத்து, 2 மது பாட்டில்களை வாங்கி வரச்சொன்னாராம் கவிதா.. மணியும் 2 பாட்டில்களை கவிதாவிடம் கொண்டு வந்து தந்துள்ளார்.
பாட்டில் மணி
அதில் ஒரு பாட்டிலை மணியிடமே கொடுத்து குடிக்க சொல்லிவிட்டு, இன்னொரு பாட்டிலை மட்டும் கவிதா எடுத்து கொண்டார்..
அந்த மது பாட்டிலில், சிரஞ்சி மூலம் விஷம் கலந்துவிட்டார்.. பிறகு, இதனை கணவர் சுகுமாரிடம் கொண்டு போய் தந்துவிட்டு வந்தார்..
மனைவி எதுக்கு சரக்கு பாட்டில் வாங்கி தர வேண்டும்? என்று யோசிக்காத சுகுமார், அந்த பாட்டிலை வாங்கி வைத்து கொண்டாராம்.. வேலைக்கு செல்லும்போது இந்த மதுபாட்டிலையும் கையோடு எடுத்துச்சென்றுள்ளார்..
கறிக்கடை
அப்போது, அவருடன் அதே கறிக்கடையில் வேலைபார்க்கும் ஊழியர் ஹரிலால் என்பவர், தனக்கும் மது வேண்டும் என்று கேட்டாராம்..
அந்த தொழிலாளி பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்.. தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர் என்பதால், அந்த பாட்டிலில் இருந்தே, அவருக்கும் கொஞ்சம் குடிக்க தந்துள்ளார்..
2 பேரும் தண்ணி அடித்துவிட்டு, மதிய உணவு சாப்பிட்டு முடித்துவிட்டு, மறுபடியும் வேலைக்கு வந்துள்ளனர்..
அப்போது 2 பேருக்குமே வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.. கொஞ்ச நேரத்தில் ஹரிலால் அங்கே மயங்கி விழுந்துள்ளார்… அவரை உடனடியாக மருத்துவமனையில் கொண்டுபோய் அனுமதித்துள்ளார் சுகுமார்..
சீரியஸ் கண்டிஷன்
பிறகு தனக்கும் உடல்நிலை சரியில்லை என்பதால், வீட்டுக்கு சென்றுள்ளார்.. ஆனால், அடுத்த சில மணி நேரத்திலேயே சுகுமாரின் உடல்நிலையும் சீரியஸாகிவிட்டது.. அவரையும் அங்கிருந்தவர்கள், அழைத்து வந்து சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையின்போதுதான், 2 பேருக்குமே மதுவில் விஷம் கலந்து அருந்தி உள்ளதை டாக்டர்கள் கண்டுபிடித்தார்கள்.. இதனால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் படாளம் போலீசுக்கு விஷயத்தை சொன்னார்கள்.
ஆசிட் சிரஞ்சி
போலீசாரும் விசாரணை நடத்தியதில், மனைவி கவிதா மீது சந்தேகம் எழுந்தது.. அவரை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் மதுவில் விஷம் கலந்தது ஒப்புக் கொண்டுள்ளார்…
ஆனால், கணவனும், நண்பர் ஹரிலாலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டனர்..
இதையடுத்து, கவிதா கைது செய்யப்பட்டார்.. இப்போது ஜெயிலில் இருக்கிறார்.. கவிதாவுக்கு ஒரு மகன், ஒரு மகள் என 2 பிள்ளைகள் இருக்கிறார்களாம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமைதான், மதுவை வாங்கி வரச்செய்துள்ளார் கவிதா.. அதில், சிரஞ்சி மூலம், ஆசிட்டை கலந்தாராம்..
ஞாயிற்றுக்கிழமை
உடனே அதை கணவரிடம் கொண்டு போய் தந்து, “உங்களுக்கு யாரோ இதை தர சொன்னாங்களாம்” என்று மதுபாட்டிலை நீட்டியுள்ளார்..
நமக்கு யார் பாட்டில் வாங்கி தந்திருப்பார்கள் என்று குழம்பினாலும், அதை வாங்கி பேசாமல் வைத்து கொண்டாராம் சுகுமார்.. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஏற்கனவே போதையில் இருந்ததால், இந்த மதுவை குடிக்கவில்லை..
மறுநாள் வேலைக்கு போகும்போதுதான், இதை கையோடு கொண்டு சென்றாராம் சுகுமார்.. ஆனால், கவிதாவின் அந்த கள்ளக்காதலன் யார் என்று தெரியவில்லை.. கவிதாவிடம் விசாரித்து கொண்டிருக்கிறது போலீஸ்!!!