முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் இன்று (16) அதிகாலை சீனாவுக்கு பயணமாகியுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீனா செல்வதற்காக மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கி பயணித்துள்ளனர் என விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை 12.25 மணிக்கு மலேசியன் ஏர்லைன்ஸின் MH-178 விமானத்தில் புறப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேற, விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தை பயன்படுத்தியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் ஜனாதிபதியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சிறப்பு விருந்தினர் அறை (V.I.P. Lounge) ஊடாகப்பணம் செலுத்தி அல்லது சாதாரண பயணிகள் முனையத்தின் ஊடாகவோ செல்வதற்கு வசதிகள் காணப்படும் நிலையில், முன்னாள் ஜனாதிபதியும் அவரது மனைவியும் சரக்கு முனையத்தை பயன்படுத்தி சென்றுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply