திருமணத்தின் போது மணமகனின் வாயில் மாமியார் சிகரெட்டை வைக்க, அதனை மாமனார் பற்ற வைக்கும் வினோத சம்பவம் குஜராத்தில் அரங்கேறி உள்ளது.
அகமதாபாத், குஜராத்தில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புது மாப்பிள்ளையை சிகரெட்டும் பான் மசாலாவும் வழங்கி வரவேற்கும் வீடியோ வைரலாகப் பரவுகிறது.
இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில் உறவினர்கள் முன்னிலையில், சோபாவில் அமர்ந்திருக்கும் மணமகனுக்கு அவரது மாமியார் வாயில் சிகரெட்டை வைக்கிறார்.
மாமனார் அந்த சிகரெட்டைப் பற்ற வைப்பது போல் பாவனை செய்கிறார். பின் அவரே சிகரெட்டை மணமகன் வாயில் இருந்து எடுத்து விடுகிறார்.
இது தெற்கு குஜராத்தில் உள்ள சில கிராமங்களில் திருமணத்தின் போது கடைப்பிடிக்கப்படும் ஒரு பாரம்பரிய நிகழ்வாகும், மணமகன் சிகரெட்டை புகைக்கவில்லை சம்பிரதாயத்துக்காகவே இது போன்ற சடங்கு செய்யப்பட்டது என இந்த திருமண நிகழ்வின் வீடியோவை பகிர்ந்து ஜோஹி என்பவம் விளக்கம் அளித்துள்ளார்.
இது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவரும் நிலையில், இந்தச் சம்பவம் எந்த ஊரில் நடந்தது என்று தெரியவரவில்லை.
ஆனால், குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது. இந்த வீடியோவை பற்றி பலவிதமான கருத்துகளை நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள்.
View this post on Instagram