மிரிஹான பொலிஸ் நிலையத்துக்குள் தனது உடலுக்கு தீ வைத்த ஒரு நபர் தனது மனைவியை எரிக்க முற்பட்டபோது பலத்த பிரயத்தனம் மேற்கொண்டு பொலிஸார் தடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.

மிரிஹான தலைமையக பொலிஸாரின் முறைப்பாடு பிரிவில் சந்தேக நபர் தன்னிடமிருந்த லைட்டரை பற்றவைத்து தனது உடலுக்கு தீவைத்து அருகிலிருந்த மனைவியைக் கட்டிப்பிடிக்க முற்பட்டதையடுத்து அந்தப் பெண் பிரதான வாயிலுக்கு வெளியே ஓடி வந்து உயிரை காப்பாற்றியுள்ளார்.

இந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனைவி மீது அசிட் வீசிய குற்றத்துக்காக அந்த நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும், சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்ததாக மூன்று உயர்நீதிமன்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply