நடிகர் மயில்சாமி இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

57 வயதாகும் மயில்சாமி பெண்ணின் மனதைத் தொட்டு, தூள், தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துப் பிரபலமானவர்.

சத்தியமங்கலத்தைச் சேர்ந்த இவர் தனித்துவமான உடல்மொழியாலும் வசன உச்சரிப்பாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.

விவேக், வடிவேலு உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்.

ரஜினி, விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன், ஆர்.ஜே.பாலாஜி எனப் பல நடிகர்களுடைய படங்களில் காமெடியனாக கலக்கியிருக்கிறார். நடிகர் என்பதை தாண்டி சமூகம் சார்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்துயிருந்தார்.

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அரசியல் கருத்துகள் பலவற்றை பேசியிருக்கிறார். 2021 சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடவும் செய்தார்.

மயில்சாமியின் மறைவு திரையுலகத்தையும் ரசிகர்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

Share.
Leave A Reply