கணவரை காணவில்லை என கடந்த 7 மாதங்களுக்கு முன்பு போலீசில் புகார் செய்தார். உடல் பாகங்களை அசாமில் இருந்து மேகாலயாவுக்கு கொண்டு சென்று பள்ளத்தாக்கில் வீசியது தெரியவந்தது.

கவுகாத்தி: அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒரு பெண் தனது கணவர் மற்றும் மாமியாரை கொன்று சிறு துண்டுகளாக வெட்டி பாலிதீன் பைகளில் அடைத்து மேகாலயா கொண்டு சென்று வீசியுள்ளார்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள சந்த்மாரி மற்றும் நரேங்கி ஆகிய இடங்களில் வெவ்வேறு வீடுகளில் இந்த சம்பவம் நடந்தது.

கொலையுண்டவர்கள் அமரேந்திர தே மற்றும் அவரது தாயார் சங்கரி தே ஆவார்கள். அமரேந்திர தேயை காணவில்லை என்று அவரது மனைவி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு போலீசில் புகார் செய்தார்.

அதேபோல் சங்கரி தேயை காணவில்லை என்று அவரது உறவினர் புகார் செய்தார்.

இதையடுத்து அமரேந்திர தேயின் மனைவிமீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்த போது தனது காதலன் மற்றும் குழந்தைப்பருவ நண்பருடன் சேர்ந்து கணவரையும், மாமியாரையும் கொலை செய்ததாக தெரிவித்தார்.

அவர்களின் உடல்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பாலிதீன் பையில் அடைத்துள்ளார். பின்னர் அசாமில் இருந்து மேகாலயாவுக்கு கொண்டு சென்று பள்ளத்தாக்கில் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களின் உடல் பாகங்களை போலீசார் மீட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக ஜான்மதி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். 7 மாதங்களுக்கு பிறகு இந்த கொலையில் துப்பு துலங்கியுள்ளது.

Share.
Leave A Reply