ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்ளும் திட்டத்தை 2030ககுள் செயல்ப்படுத்த விளாடிமீர் புதின் உத்தரவிட்டுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
2021 இல் தயாரிக்கப்பட்ட இந்த திட்டத்தில், பெலாரஸ் நாட்டை அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியாக நெருக்கடிக்கு உளளாக்குவதன் மூலம் இத் திட்டத்தை செயல்
படுத்தவும் ரஷ்யா முடிவு செய்துள்ளதாக ரஷ்யாவின் இரகசிய ஆவணம் வெளியே கசிந்ததில் தெரிய வந்துள்ளது.
1999இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், பெலாரஸ் ரஷ்யஒன்றியத்தின் ஒரு பகுதியாவே செயல்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில் பெலாரஸின் இறையான்மை, விவசாயம், தெழில்துறை மற்றும் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டை ரஷ்யாவிடம் ஒப்படைக்க வேண்டியது மட்டுமே எஞ்சியுள்ளது.
பெலாரஸ் தொடர்பான ரஷ்யாவின் இந்த திட்டமானது, அதன் அண்டை நாடுகளான போலந்து மறறும் லித்துவேனியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.
ரஷ்யாவின் நீண்டகால திட்டத் தின்படி எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா, பெலாரஸ்,உக்ரேன மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதாகும்.
புடின் நிர்வாகத்தின் இந்த திட்டத்திற்கு ரஷ்யாவின் முன்று வகையான உளவு அமைப்புகளும் தங்கள் பங்கிற்கு தீவிரமாக செயலாற்றிவந்ததாகவும் தெரியவந்துள்ளது.
ஜனவரியில், இதேபோன்ற ஒரு ரகசியஆவணம் கசிந்ததில்,மால்டோவா நாட்டை
தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் திட்டம் அம்பலமானது
பெலாரஸ் நாட்டை பொறுத்தமட்டில்,அதன் ஜனாதிபதி எப்போதும் விளாடிமிர் புடினின் விசுவாசியாகவே செயல்பட்டு வருகிறார்,
மேலும, உக்ரைன் மீதான தாக்குதலுக்கு முன்னர் பெலாரஸ் நாட்டில் சுமார் 10,000 ரஷ்ய இணுவத்தினர் குவிக்கப்பட்டு ஒத்திகையும் பார்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தகது.