அம்பாறை – சம்மாந்துறை, செந்நெல் பகுதியில் கற்குழி ஒன்றில் நீராடச்சென்ற சிறுவன் ஒருவன் நேற்று(26) உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறை – செந்நெல் பகுதியைச் சேர்ந்த 11 வயதான சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று(26) மாலை நண்பர்களுடன் விளையாடச் சென்ற போது நீர் நிரம்பி காணப்பட்ட பழமையான கற்குழி ஒன்றில் குறித்த சிறுவன் நீராடுவற்காக இறங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் 20 வருடங்களுக்கு முன்னர் கல் அகழ்வு இடம்பெற்று வந்த நிலையில் அந்த குழிகள் முறையாக மூடப்படாது கைவிடப்பட்டதனாலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.