யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் சபேசன் என்ற நபர் பிரான்ஸ் நாட்டிலுள்ள வீடொன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் வசிக்கும் அவரது மனைவிக்கு அவர் பணிபுரியும் வீட்டின் தொலைபேசி இலக்கம் மற்றும் முகவரி வழங்கியுள்ளார்.
இந்நிலையில், இவரது மனைவி கடந்த வாரம் தனது கணவரை தொலைபேசியில் அழைத்தபோது, சில நாட்களாக அவரைக் காணவில்லை என குறித்த வீட்டினர் அவரது மனைவிக்கு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காணாமல்போன கணவரை கண்டுபிடித்து தருமாறு பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளிடம் மனைவி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து விசாரணை நடத்திய பிரான்ஸ் அதிகாரிகளும் பொலிஸாரும் அவர் கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்துள்ளனர்.
இறந்தவர் பணிபுரிந்த வீட்டின் ஏனைய ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதுடன் சிசிரிவி கமெரா சோதனையில் அவர் எப்படி வெட்டிக் கொல்லப்பட்டார் என்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், குறித்த வீட்டின் உரிமையாளரை சந்தேகத்தில் கைதுசெய்து விசாரணை நடத்தியபோது, உயிரிழந்த இலங்கையரின் சடலம் குப்பை மேடு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.