தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர நாராயணன். இவரது மனைவி பெயர் முருகம்மாள்.

சங்கரநாராயணன் மற்றும் முருகம்மாள் தம்பதிக்கு மொத்தம் மூன்று மகன்கள் உள்ளனர். இதனிடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இலத்தூர் பகுதியில் நடந்த ஒரு விபத்தில் சிக்கிய சங்கரநாராயணன் பரிதாபமாக உயிரிழந்து போனார்.

மேலும் இது தொடர்பான வழக்கு ஒன்று தென்காசி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதற்காக முருகம்மாள் மற்றும் அவரது இளைய மகன் உதயமூர்த்தி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் தென்காசிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பைக் மீது மோதிய கார்

அப்போது அவர்கள் பின்னால் வந்த கார் ஒன்று, முருகம்மாள் மற்றும் மகன் உதயமூர்த்தி ஆகியோர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.

முருகம்மாள் மற்றும் உதயமூர்த்தி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த விபத்தின் காரணமாக சம்பவ இடத்திலேயே முருகம்மாள் உயிரிழந்துள்ளார்.

மறுபக்கம் அதிக காயம் ஏற்பட்ட உதயமூர்த்தியை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியும் வருகின்றனர்.

தெரிய வந்த அதிர்ச்சி பின்னணி

அப்படி இருக்கையில், இது விபத்து அல்ல என்பதும் என்பது பற்றிய திடுக்கிடும் தகவலும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முருகம்மாளுக்கும் அவரது மூத்த மகனான மோகன் என்பவருக்கும் இடையே நீண்ட வருடங்களாக சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன் பெயரிலும் வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

அதே போல சங்கரநாராயணன் இறந்த வழக்கில் கிடைத்த நஷ்ட ஈடு தொகையையும் தனது தாயிடம் மோகன் கேட்டு வந்ததாகவும், ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த முருகம்மாள் சொத்திலும் பங்கு தரமாட்டேன் என்றும் தெரிவித்திருந்ததாக சொல்லப்படுகிறது.

தாயை கொலை செய்த மகன்

இதன் காரணமாக தனது தாய் என்றும் பாராமல் ஆத்திரத்தில் அவரை கொலை செய்யவும் மோகன் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அப்படி இருக்கையில் தான் மோகன் திட்டம் போட்டு காரை ஏற்றி தாயை கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.

இந்த கொலையில் மோகனுடன் தொடர்புடையது யார் என்பது குறித்தும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள மோகனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

சொத்துக்காக ஆசைப்பட்டு பெற்ற மகனே தாயை கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply