திருமணம் தாண்டிய உறவுகள், மிகப்பெரிய விபரீதங்களை ஏற்படுத்தி விடுகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள சன்சோர் என்ற இடத்தை சேர்ந்தவர் சங்கர் ராம். இவர் மனைவி பப்லி, 5 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
வீட்டில் பப்லி எப்போதும் போனில் பேசிக்கொண்டிருப்பார் என சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் பப்லியின் நடவடிக்கையில் சங்கர் ராம் சந்தேகப்படவில்லை.
ஆனால் நாளடைவில் அவரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் அது குறித்து சங்கர் விசாரிக்க ஆரம்பித்தார் என்றும், இதில் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு வாலிபருடன் பேசுவதும் தெரிய வந்தது.
போனில் என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரகசியமாக போனில் பேசுவதை ரிக்கார்டிங் செய்யும் வகையில் சங்கர் போனில் ஏற்பாடு செய்தார்.
கால்வாயில் உடல் மீட்பு
அவர்கள் பேசியதை கேட்டுப்பார்த்தில் அவர்களிடையே தொடர்பு இருப்பது தெரிய வந்தது. உடனே இது குறித்து தனது மனைவியிடம் கேட்டுபார்த்தார்.
அதோடு இத்தொடர்பை கைவிடும்படி கேட்டுக்கொண்டார் சங்கர். ஆனாலும் பப்லி தொடர்ந்து தொடர்பை கைவிடாமல் இருந்தார் எனச் சொல்லப்படுகிறது.
இதனால் இப்பிரச்னைக்கு தீர்வு காண ஒரு முறை சங்கர் பஞ்சாயத்தை கூட்டினார். அதில் அப்பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த வாலிபர் இனி பப்லியுடன் பேசமாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.
ஆனால் அது ஒரு சில நாள்கள் மட்டுமே நீடித்தது. மீண்டும் இருவரும் பேச ஆரம்பித்தனர் என சொல்லப்படுகிறது.
பப்லியுடன் தொடர்பு வைத்திருந்த நபர் போனில் சங்கரை மிரட்டவும் தொடங்கினார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சங்கர் தனது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள சித்தேஷ்வர் என்ற இடத்திற்கு சென்றார்.
அங்கு நர்மதா கால்வாய் இருக்கும் பகுதிக்கு அவர்களை அழைத்துச்சென்றார்.
அங்கு 6 பேரையும் ஒருவரோடு ஒருவர் கைகளை சங்கர் கட்டினார். பின்னர் அவர்களை அதே கால்வாயில் தள்ளிவிட்டு சங்கரும் அதில் குதித்துவிட்டார். அவர்கள் அனைவரும் மறுநாள் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஒரே சிதையில் வைத்து எரிக்கப்பட்டனர்.
அவர்களின் தற்கொலை குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர்களின் செல்போன் உரையாடலை வைத்து தான் திருமணம் தாண்டிய உறவு தெரிய வந்திருப்பதாகவும் தெரிகிறது.
கிராமத்தினர் அவர்களை துன்புறுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவர்களின் தற்கொலை குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.