ஆட்டிறைச்சியின் எலும்பு சிக்கியதால் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்தார்.தென்மராட்சி – மட்டுவில் தெற்கை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தயான லோகேந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா (வயது- 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

.திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்தப் பெண், கடந்த 25ஆம் திகதி ஆட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். ஆட்டிறைச்சியின் எலும்பு துண்டொன்று தொண்டைக்குள் சிக்கியுள்ளது. இதனால் அவர் வாழைப்பழம் சாப்பிட்டுள்ளார். எலும்பு மார்பு பகுதிவரை இறங்கி சிக்கிவிட்டது.

மறுநாள், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் சென்றுள்ளார். அவருக்கு வாய் வழியாக கமெராவை செலுத்தி ஆராய மருத்துவர்கள் முற்பட்டுள்ளனர். ஆனால், இதற்கு உடன்பட அந்த பெண் மறுத்து வீட்டுக்கு சென்றுள்ளார் என்று தெரிய வருகிறது.

இந்த நிலையில், திங்கட்கிழமை அந்தப் பெண் இரத்த வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இறப்பின் பின்னர், கமெரா மூலம் பார்த்தபொழுது ஆட்டிறைச்சி எலும்பு குருதிக் குழாயில் குத்தியதாலேயே இரத்த வாந்தி என்று மருத்துவர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை நேற்று (08) செவ்வாய் நடத்தினார்.

Share.
Leave A Reply