கோவையைச் சேர்ந்த 24 வயதான ஷர்மிளா பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய லட்சியமாகக் கொண்டுள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் மகளான ஷர்மிளா பார்மசியில் டிப்ளமோ முடித்துள்ளார்.

தற்போது முழு நேரமாக ஆட்டோ ஓட்டி வரும் ஷர்மிளா, கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய கனவாக கொண்டுள்ளார்.

பேருந்து ஓட்டுவதற்கான பயிற்சி பெற்று அதற்கான உரிமமும் பெற்றுள்ளார்.

ஆண்கள் மட்டுமே அதிகம் கோலோச்சும் கனரக வாகனங்களில் தனக்கான முத்திரையைப் பதிக்க வேண்டும் என்கிறார் ஷர்மிளா.

Share.
Leave A Reply