தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். பைக் மெக்கானிக்காக பணியாற்றிய அஜித், சினிமா மோகத்தால் ஆரம்பத்தில் விளம்பரங்களில் நடித்தார்.
அதன் பிறகு பிரேமா புத்தகம் என்ற தெலுங்கு படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இவர் நடித்த ஒரே தெலுங்குப் படம் இதுதான்.
அமராவதியில் தொடங்கி துணிவு அஜித்தின் தமிழ் திரையுலகம் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது.
அஜித் இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் முன்னணி நடிகராக உயர முக்கிய காரணம் அவரது ரசிகர்கள்தான்.
அஜித்துக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவர்களை திருப்திப்படுத்தவே அஜித் கதைகளை தேர்வு செய்கிறார்.
அஜித் கடைசியாக 2002 ஆம் ஆண்டு வெளியான ராஜா படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் நடித்தார்.
இருவருக்குமான நகைச்சுவை காட்சிகள் படத்தில் வேறொரு லெவலுக்கு சென்றது. அதன்பிறகு இன்றுவரை இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
ராஜா படத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலால் 20 வருடங்களாக வடிவேலுவை அஜித் தனது படத்தில் நடிக்க வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ராஜாவின் கதைப்படி வடிவேலு அஜித்தின் மாமாவாக நடித்தார், மேலும் அந்த கதாபாத்திரம் படம் முழுவதும் அஜித்தை வாடா போடா என்று குறிப்பிடும் வடிவேலு படப்பிடிப்பு முடிந்தும் அதே ஸ்டைலில் அவரை வாடா போடா என்று அழைப்பது அஜித்திற்கு பிடிக்கவில்லை.
இதை இயக்குனரிடம் அஜித் கூறியுள்ளார். இதுபற்றி வடிவேலுவிடம் கூறி உள்ளார் இயக்குனர்.
அதையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு மீண்டும் அஜித்தை வாடா போடா என்றே அழைத்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. அதன்பிறகு,
படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை வடிவேலுவிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். அதன்பிறகு வடிவேலுவைப் படத்தில் நடிக்க வைக்கலாம் என கூறினார் வேண்டாம் என்று சொல்லி திருப்பி அனுப்புவார் அஜித்.
ராஜா படத்தின் போது நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு கடந்த 20 வருடங்களாக அஜீத்தும் வடிவேலும் இணையவில்லை.