நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, இன்று டொலரின் கொள்வனவு விலை ரூ. 313.77 ஆகவும், விற்பனை விலை ரூ. 331.05ஆகவும் உள்ளது.
அவுஸ்திரேலிய, கனடா மற்றும் சிங்கப்பூர் டொலர்கள், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்ட் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ளது.