கனடாவிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு வாள் வெட்டு தாக்குதல் நடத்திய யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இன்றைய தினம் (08.03.2023)சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிப்புலம் ஐயப்பன் கோவில் பகுதியில் கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி ஒருவர் மீது வாளால் வெட்டி காயப்படுத்தி அவரது காரையும் சேதப்படுத்தித் தப்பிச் சென்ற நால்வர் அடங்கிய கும்பலில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில் கனடா நாட்டிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் பணம் அனுப்பப்பட்டு இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
அத்துடன் பணம் அனுப்பிய நபர் வாள் வெட்டு சம்பவத்திற்கு அடுத்த நாள் யாழ்ப்பாணம் வந்துள்ளார் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.