சுற்றுலாப்பயணிகள் 1894 பேர் மற்றும் 906 ஊழியர்களுடன் பிரின்ஸஸ் குரூஸ் அதிசொகுசு சுற்றுலாப்பயணக் கப்பலொன்று சனிக்கிழமை (11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இக்கப்பல் தாய்லாந்திலிருந்து வருகை தந்துள்ளது. இக்கப்பலில் வருகை தந்துள்ள சுற்றுலாப்பயணிகளில் 159 பேர் கொழும்பு துறைமுகத்தில் இறங்கியுள்ளதோடு , அவர்கள் கண்டி, பின்னவல, நீர்கொழும்பு மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேசங்களுக்கு செல்லவுள்ளனர்.

குறித்த கப்பல் சனிக்கிழமை மாலை கொழும்பு துறைமுகத்திலிருந்து டுபாய் நோக்கி திரும்பிச் சென்றது. இவ்வாண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள முதலாவது அதிசொகுசு சுற்றுலாப்பயணக் கப்பல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை கொவிட் தொற்றின் பின்னர் சீனாவின் ஷங்காய் நகரிலிருந்து 180 சீன சுற்றுலாப்பயணிகள் கொண்ட குழு வெள்ளிக்கிழமை (10) நாட்டை வந்தடைந்துள்ளது. இவர்கள் 7 நாட்கள் நாட்டில் தங்கியிருந்து வெ வ்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply