கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வரணி பிரதேச வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டி கொடிகாமம் பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் இரண்டு மாடுகள் உயிரிழந்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம் பெற்ற தினம் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதி மது போதையில் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அத்துடன் அவர் தனிப்பட்ட தேவை ஒன்றுக்காக, மனைவி வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு எடுத்ததற்கு அமைய, தொலைபேசியில் உரையாடிக்கொண்டு அரச வாகனத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமையும் தெரியவந்துள்ளது.