அமெரிக்காவில் லாட்டரி வாங்கிய பெண்மணி ஒருவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. அவர் அந்த லாட்டரியை வாங்கியபோது நடந்த சம்பவம் தான் பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.

 

உலகின் பல நாடுகளில் அரசு அனுமதியுடன் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.

தங்களுடைய அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க விரும்பும் நபர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர்.

ஆனாலும் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என யார்தான் சொல்லி விட முடியும்? ஒரே லாட்டரி டிக்கெட் மூலம் திடீரென பெரும் பணக்காரர்களான நபர்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படியான சம்பவம் ஒன்று தான் அமெரிக்காவை சேர்ந்த வெண்டி ஹெஸ்டன் எனும் பெண்மணிக்கும் நடந்திருக்கிறது.

வெண்டி ஹெஸ்டன்

அமெரிக்காவின் நார்த் கரோலினா பகுதியை சேர்ந்தவர் வெண்டி ஹெஸ்டன். இவர் சமீபத்தில் அருகில் உள்ள சூப்பர் மார்கெட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது, அவருடைய கணவரும் உடன் சென்றிருக்கிறார். பொருட்களை வாங்கிக்கொண்டிருந்த வெண்டி ஹெஸ்டனுக்கு திடீரென ஒரு குரல் கேட்டதாம். அப்போது, லாட்டரி வாங்கு என யாரோ சொல்வது போல கேட்டதாக கூறும் வெண்டி ஹெஸ்டன், குழப்பத்துடன் லாட்டரியை வாங்கியுள்ளார்.

 

ஜாக்பாட்

சிறிது நாட்கள் கழித்து தான் வாங்கிய லாட்டரிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக கிடைத்தை அறிந்து திகைத்துப் போயிருக்கிறார் வெண்டி ஹெஸ்டன். இதுகுறித்து தனது கணவரிடம் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் இந்த வெற்றியை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் பின்னர் இது கடவுள் கொடுத்த பரிசு என நினைத்ததாகவும் தெரிவித்திருக்கிறார் வெண்டி ஹெஸ்டன்.

நீண்ட நாள் கனவு

இந்த ஜாக்பாட் தொகையை கொண்டு தனது நீண்ட நாள் கனவான சொந்த வீட்டை வாங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார் ஹெஸ்டன். இதுபற்றி அவர் பேசுகையில்,”ஷாப்பிங் செய்தபோது லாட்டரி வாங்கு என யாரோ கூறியது எனது காதில் தெளிவாக கேட்டது.

ஆனால் யார் அப்படி சொன்னது என்பது தெரியவில்லை. இந்நேரம் வரையில் அதை பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த தொகையை கொண்டு எனது பல நாள் கனவான சொந்த வீட்டை வாங்க இருக்கிறேன்” என்றார்.

Share.
Leave A Reply