27 வயதான பெண் ஒருவரின் சடலம் பிலியந்தல ஸ்வர்ணபால பகுதியில் வீடொன்றுக்குள் இருந்து நேற்று மாலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைகள் இரண்டும் துணியினால் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கியவாறு குறித்த சடலம் காணப்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரிய வருகிறது.

கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தாயின் வீட்டிற்கு வந்து தங்கிய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டள்ளார்.

சடலம் தற்பொழுது களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உடற்கூற்றுப் பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply