•ராணி எலிசபெத் மரணம் அடைந்ததால் தற்போதைய மன்னர் சார்லசிடம் தொகைக்கு உரிய ஆவணம் கையெழுத்துக்கு வைக்கப்பட்டது.
• அரசின் செலவை குறைக்கும் நோக்கத்தில் இந்திய குருவுக்கு ரூ.32 லட்சத்தை வழங்க சார்லஸ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து மன்னர் சார்லசின் சகோதரர் இளவரசர் ஆன்ட்ரூ. 63 வயதான ஆன்ட்ரூவுக்கு இந்தியாவை சேர்ந்த குரு ஒருவர் பல வருடங்களாக சிகிச்சை அளித்து வந்தார்.
இதற்காக இந்திய குரு அடிக்கடி லண்டன் செல்வார். அவரை ஒரு விடுதியில் தங்க வைத்து ஆன்ட்ரூ ஒரு மாதம் சிகிச்சை பெறுவார்.
அப்போது அவருக்கு மசாஜ் உள்ளிட்ட உடல்நல சிகிச்சைகளை அளிப்பதுடன் போதனையும் செய்து வந்தார்.
இதற்கான தொகை ரூ.32 லட்சம் ஆகும். அவரது தாயார் ராணி எலிசபெத் இதற்கு உரிய செலவை எந்தவித கேள்வியும் கேட்காமல் வழங்கி வந்தார்.
தற்போது ராணி எலிசபெத் மரணம் அடைந்ததால் தற்போதைய மன்னர் சார்லசிடம் இந்த தொகைக்கு உரிய ஆவணம் கையெழுத்துக்கு வைக்கப்பட்டது.
ஆனால் அதில் கையெழுத்திட சார்லஸ் மறுத்து விட்டார். அத்துடன் இந்திய குருவுக்கு வழங்க வேண்டிய ரூ.32 லட்சத்தையும் அவர் வழங்கவில்லை.
இதற்குரிய பணத்தை ஆன்ட்ரூவையே செலுத்துமாறு மன்னர் சார்லஸ் கூறி விட்டார். அரசின் செலவை குறைக்கும் நோக்கத்தில் இந்திய குருவுக்கு ரூ.32 லட்சத்தை வழங்க சார்லஸ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.