• கேங்ஸ்டர் கும்பலைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

• 22 கொலைகளில் தொடர்புடைய கேஸ்டர் ஒருவருக்கு 945 ஆணடுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

எல் சால்வடோர் நாட்டில் கொலை உள்ளிட்ட பல்வேறு ஆபத்தான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் கேங்ஸ்டர் கும்பல் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கேங்ஸ்டர் கும்பலைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.

அவ்வகையில், மாரா சல்வத்ருச்சா என்ற கேங்ஸ்டர் கும்பலைச் சேர்ந்த வில்மர் செகோவியா என்ற குற்றவாளிக்கு 1310 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் மீது 33 கொலைகள், 9 கொலை சதிகள் மற்றும் ஆபத்தான குற்றச் செயல்கள் உள்ளிட்ட ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளன.

இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், இந்த நீண்டகால தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

22 கொலைகள் மற்றும் பல கொலை முயற்சிகள், தாக்குதல்கள், தீவைத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்ற வழக்குகளில் தொடர்புடைய கேஸ்டர் மிகுவல் ஏஞ்சல் போர்ட்டிலோவுக்கு 945 ஆணடுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

 

Share.
Leave A Reply