யாழ்ப்பாணம் உரும்பிராய் பிரதேசத்தில் நடாத்தப்பட்டு வரும் சிறுவர் காப்பகத்திலிருந்த மூன்று சிறுமிகளைக் காணவில்லையென முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

14, 15 மற்றும் 16 வயதுடைய மூன்று சிறுமிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.

முல்லைத்தீவு மற்றும் உரும்பிராய் பிரதேசங்களில் வசித்து வந்த இந்த சிறுமிகள் பாதுகாப்பிற்காக குறித்த சிறுவர் காப்பகத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Share.
Leave A Reply