“வீட்டு லொக்கரில் இருந்த 60 பவுன் நகைகள், வைரம், நவரத்தின கற்கள் என்பன மாயமாகியுள்ளதாக” நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா அண்மையில் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
மேலும் குறித்த புகாரில் `லொக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 பணியாளர்களுக்கும் தெரியும்` எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரது வீட்டில் பணிபுரியும் ஈஸ்வரி என்பவர் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து பொலிஸாரின் விசாரணையில்” ஈஸ்வரி வங்கியில் கடன் வாங்கி சோலிங்கநல்லூரில் 95 லட்சம் ரூபாய்க்கு நிலம் வாங்கியிருப்பதும் வாங்கிய கடனை இரண்டே வருடங்களில் திருப்பி செலுத்தியிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து ஈஸ்வரியைக் கைது செய்துள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்து தனித்தனியே வசித்து வரும் நிலையிலேயே இத்திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்செய்தி வெளியானதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்துள்ள வாசகர்கள், ”ஏன் தனுஷ் திருடி இருக்கக் கூடாது? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.