பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்கத்தாவில் தமிழ் குடும்பத்தில் பிறந்த பாம்பே ஜெயஸ்ரீ, தனது பெற்றோர்களிடமிருந்து கர்நாடக இசையை கற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து முறையாக இசையை கற்றுக்கொண்ட அவர் சினிமாவிலும் பின்னணி பாடகியாக களம்கண்டாா். .
ஜெயஸ்ரீ தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் ஏராளமான திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.
தமிழில் இளையராஜா, ஏ.ஆர்,ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற பிரபலமான இளையமைப்பாளர்களின் இசையில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.
பின்னணி பாடகிக்கான தமிழ்நாடு அரசின் விருது, பத்மஸ்ரீ ,சங்கீத கலாநிதி விருது என ஏராளமான விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது லீவர்பூல் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றுள்ள ஜெயஸ்ரீ லிவர்பூலில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் அறையில் சுயநினைவின்றி காணப்பட்டதனையடுத்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதால் அவர் சுயநினைவை இறந்ததாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஜெயஸ்ரீக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாகவும், மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைத்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.