கேரளாவில் காவல்துறை அதிகாரிக்கு சிறுமி ஒருவர் சல்யூட் அடிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது.

மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு.

அதிலும் குறிப்பாக குழந்தைகள் கியூட்டாக மேற்கொள்ளும் விஷயங்கள் குறித்த வீடியோக்கள் மற்றும் பதிவுகள் சமூக வலை தளங்களில் எப்போதும் கோடிக்கணக்கான மக்களிடையே அதிக அளவில் ஷேர் செய்யப்படும். அந்த வகையில் காவல்துறை அதிகாரிக்கு சிறுமி ஒருவர் சல்யூட் அடிக்கும் வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சல்யூட்

இந்த வீடியோவில் காவல்துறை அதிகாரி ஒருவர் ஜீப் அருகே நிற்கிறார். அப்போது பின்பக்கமாக இருந்து புன்னகையுடன் ஓடி செல்லும் சிறுமி ஒருவர் காவல்துறை அதிகாரியின் முன்னே நிற்கிறார். சிறுமியை ஆச்சர்யத்துடன் காவல்துறை அதிகாரி பார்க்கிறார். அப்போது அந்த சிறுமி அதிகாரிக்கு சல்யூட் அடிக்கிறார். இதனை கண்டு புன்னகைக்கும் அந்த அதிகாரி பதிலுக்கு சிறுமிக்கு சல்யூட் அடிக்கிறார்.

இதனை தொடர்ந்து அந்த சிறுமி புன்னகையுடன் அங்கிருந்து ஓடிச் செல்கிறார். இந்த வீடியோவை கேரள காவல்துறை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில்,”குஞ்சுமோள் அவர்களின் வாழ்த்துகள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வீடியோ

இந்த வீடியோ இதுவரையில் 363,000 க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டிருக்கிறது. மேலும் நெட்டிசன்கள் “சிறுமியின் அன்பான பாராட்டு இது” என்றும், “இந்த நாளை இந்த வீடியோ இனிமையானதாக மாற்றிவிட்டது” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

641ac6f415fd7641ac6f415fd7

 

View this post on Instagram

 

A post shared by Kerala Police (@kerala_police)

அண்மையில் குஜராத் மாநிலத்தில் மாணவி ஒருவர் தேர்வுக்கு உரிய நேரத்தில் செல்ல காவல்துறை அதிகாரி உதவியிருந்தார். இது தொடர்பான வீடியோ அப்போது வைரலானது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply